டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் இன்று (14.02.2014) சந்தித்து பேசினார்.
நேற்று (13.02.2014) டெல்லி புறப்படும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி தொடர்பாக டெல்லியில் வைத்து தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால், இன்று டெல்லியில் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஏற்கனவே, விஜயகாந்த் வெளிநாட்டு பயணத்தின்போதே தே.மு.தி.க.- காங்கிரஸ் கூட்டணி முடிவாகி விட்டதாகவும், அதை உறுதி படுத்துவதற்காகதான் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்துள்ளார்என்றும்,இது தெரியாமல் பத்திரிகையாளர்கள் பைத்தியம் பிடித்து விஜயகாந்தை துரத்திக் கொண்டு அலைகிறார்கள் என்றும், காங்கிரஸ் மூத்தத்தலைவர் ஒருவர்நம்மிடம் தெரிவித்தார்.
– எஸ்.சதீஸ்சர்மா