பெரியாரின் பிறந்த ஊர் தெரியாத குஷ்பு!

kusbookushboo dmk meeting

தி.மு.க 10-வது மாநில மாநாடு 15.02.2014 அன்று  திருச்சியில் தொடங்கியது. மாலை முதல் தி.மு.க முன்னணி நிர்வாகிகள் பலர் பேசினர்.

‘ஆதிக்கமற்ற சமுதாயம் படைப்போம்’ எனும் தலைப்பில் நடிகை குஷ்பு பேசினார். இந்த நாட்டில் சுதந்திரம், சமத்துவ சமுதாயம், பகுத்தறிவு உள்ளிட்ட கொள்கைகள்  தாரக மந்திரமாக  இருந்தது. ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கி கொடுத்தவர் பெரியார் இந்த திருச்சி மண்ணில்தான் பிறந்தார் என்று நடிகை குஷ்பு பேசினார்.

இதைக் கேட்ட பத்திரிகையாளர்களும், மேடையிலிருந்த தலைவர்களும் மற்றும் மாநாட்டிற்கு வந்த தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பெரியார் பிறந்த ஊர் தெரியாத இவரெல்லாம் பேசவந்துவிட்டார் என்று கூட்டத்தில்  உள்ளவர்கள் புலம்பினார்கள்.

பெரியார் திரைப்படத்தில் பெரியாரின் துணைவி மணியம்மையாக  நடித்த நடிகை குஷ்புக்கே பெரியாரின் பிறந்த ஊர் தெரியவில்லை என்பது வெட்கக் கேடான விஷயம்.

பெரியார் 1879– ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 -ந்தேதி ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயர் கொண்டவராய்த் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார்..

இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் நாயுடு மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆவர். பின்னாளில் இவர் தந்தை பெரியார் என மரியாதையுடனும் அன்புடனும் தமிழர்களால் அழைக்கப்பட்டார்.

ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார்.  அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். பெரியார் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.