கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள இரயில்வே கேட் மூடப்பட்டு திறக்க காலதாமதம் ஏற்படுவதால், இரயில்வே கேட் மூடப்படும் ஒவ்வொரு முறையும், நூற்றுக்கணக்கான வாகனங்கள் 2 கி.மீ வரை (கோட்டைமேடு வரை) மணப்பாறை ரோட்டிலும், வடபுறம் சுங்ககேட் ரவுண்டானாவிலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நிற்கின்றன.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், அவசர நிமித்தமாக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த இடத்தில் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டி பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுமக்களின் ஒத்துழைப்போடு பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே, தமிழக முதல்வர் மனது வைத்தால்தான் இதுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
-பன்னீர்