சர்வதேச நன்கொடைகள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்துக்கே போய் சேர்ந்திருக்கிறது : எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க

RANIL

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மக்களை காட்டி, சர்வதேச நாடுகளிடம் இருந்தும், அமைப்புகளிடம் இருந்தும் நன்கொடைகளையும், கடன்களையும் இலங்கை அரசாங்கம் வாங்கிக் கொண்டது. இவை அனைத்தும் மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்துக்கே போய் சேர்ந்திருக்கிறது.

இலங்கையில் அவர்கள் தற்போது எல்லா பகுதிகளிலும் தங்களின் வியாபார நடவடிக்கைகளை விஸ்த்தரித்து இருக்கிறார்கள். ஆனால், உண்பதற்கு உணவின்றி மக்கள் அல்லல்படுகின்றார்கள் என்று இலங்கையின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.