முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று (27.02.2014) மதியம் திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ அருண்சுப்பிரமணியம் மற்றும் அணைக்கட்டு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது, தங்களது தொகுதி வளர்ச்சிக்கு உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம், இரு எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.க.- வுடன் மேற்படி இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.