காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது குவகாத்தியில் நடைபெற்ற விழாவில் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெண்கள் முண்டியடித்தபடி நெருங்கினர். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார்.
முத்தமிட்ட இந்த படம் அனைத்து செய்திதாள்களிலும் தொலைக்காடசிகளிலும் செய்தியாக வெளியானது. இந்நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராகுல்காந்தியை முத்தமிட்டது தொடர்பாக அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.