பல்கேரியா நாட்டின் தலைநகரான சோஃவியா நகரில்வசித்து வரும் 99 வயது முதியவர் ஒருவர், தினமும் தெருத்தெருவாக சென்று பிச்சையெடுத்து சேகரிக்கும் பணம் முழுவதையும் தேவாலயங்களுக்கும், அனாதை விடுதிகளுக்கும் நன்கொடையாக வழங்கி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மாதாந்திர ஓய்வூதிய பணமான 100 டாலர் பணத்தில் வாழ்ந்து கொண்டு, பிச்சையெடுத்துப் பெறும் பணம் முழுவதையும் தேவாலயங்களுக்கும், அனாதை விடுதிகளுக்கும் நன்கொடையாக வழங்கி வருகிறார்.
பொய் சொல்லவோ, திருடவோ கூடாது. மற்றவர்களுக்காக பிச்சையெடுப்பதில் தவறில்லை. கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துவது போல் . நாம் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.