அரசு முறை பயணமாக மியான்மர் நாட்டுக்கு சென்றுள்ள பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.
மியான்மர் நாட்டில் ராஜபக்சேவை மன்மோகன் சிங் சந்திக்கக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதையும் மீறி பிரதமர் அவரை சந்தித்தது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.