இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளார். சிங்கப்பூரில் அண்மையில் நடந்த விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதே காலிலேயே இப்போது நாயும் கடித்துள்ளது.
அடிக்கடி நாய் குரைக்கும். வீதிகளில் நாய்கள் பார்ப்பதுண்டு. விஷ நாய்களும் வருவதுண்டு. கிராமத்தில் இருந்த காலத்திலும் நாய்களை பார்த்திருக்கின்றேன். நான் வளர்த்த நாய் என்னை கடிக்கும் என நான் எப்போதும் எண்ணியதில்லை.
ஆனால், எனக்கு நல்ல படிப்பினை கிடைத்துள்ளது. நான் நாய் மீது வஞ்சம் கொள்ளவில்லை. நான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன். முற்பிறவியில் செய்த பாவம் காரணமாகவே தனது வலது காலில் அடிக்கடி காயம் ஏற்படுவதாக களனியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
“சந்தை கூட்டத்தில் செருப்பை வீசினாலும் அது சனியன் பிடித்தவன் தலையிலதான் விழும்” – இது கிராமத்து பழமொழி.
அரசாங்க அதிகாரிகளை மரத்தில் கட்டிப் போட்டது. இலங்கை நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பாக ஆராய விஜயம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு விருப்பம் என்றால் உடனடியாக நான் திருமணம் செய்துகொள்கின்றேன் என கூறியது. இப்படி மேர்வின் சில்வா ஆடிய கூத்துக்கள் ஏராளம். இவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் நம்பகமான அடிமை என்பது குறிப்பிடதக்கது.