வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டி குடியிருப்புவாசிகளின் சார்பாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு கோரிக்கை மனு

apartment uriyurநாங்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 59 வார்டு பகுதியில் உறையூர் கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் JVR APPARTMENTஎன்ற அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி இருக்கிறோம். மேற்படி குடியிருப்பில்  12 வீடுகள் மற்றும் முன்புறம் ஆஸ்பத்திரி மற்றும் ஆபீஸ் இயங்கி வருகிறது. பொதுவாக வீடு வாங்கும் அனைவரும் கடன் மற்றும் பேங்க் லோன் மூலம் தான் வீடு வாங்கி இருக்கிறோம். மேற்படி குடியிருப்புகளுக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் வீட்டு வரி சதுர அடிக்கு ரூ2 வீதம் வாடகை உயர்த்தி உள்ளது.

குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் 2 படுக்கை அறை மற்றும் 3 படுக்கை அறை வீடுகளுக்கு வரியை ரூ.6500 முதல் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்து மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே வரியை கூடுதலாக நிர்ணயம் செய்துள்ளார்கள். இதனால் எங்களுக்கு பொருளதார ரீதியில் மிகபெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்து நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சிக்கு உத்தரவு வழங்குமாறு JVR APPARTMENT குடியிருப்புவாசிகளின் சார்பாக அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

                                                                                  

       இப்படிக்கு,

                        JVR APPARTMENT                     

     குடியிருப்புவாசிகள்

              உறையூர் கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில்

            திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.