இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமெரிக்க தீர்மானத்தின் மீது மூன்று சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும், நடுநிலையாக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
அதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பாகிஸ்தான் தீர்மானம் சமர்ப்பித்திருந்தது. நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்க தீர்மானத்தின் பத்தாவது பந்தியை நீக்க வாக்களித்தது. ஆனாலும், அந்த தீர்மானம் படு தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் சுயரூபம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.