இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் இன்று (28.03.2014) காலை 10 மணியளவில் பயிற்சிக்காக ஆக்ரா விமான படை தளத்தில் இருந்து பறந்து சென்றது.
மத்திய பிரதேசம்–ராஜஸ்தான் மாநில எல்லையான குவாலியர் அருகே பறந்து சென்ற போது அந்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகியுள்ளனர். தகவல் அறிந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விபரம் வெளியாகவில்லை. தற்போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2010 ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து இந்த ரக விமானங்களை இந்திய விமானப்படை ரூ.6 ஆயிரம் கோடிக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.
–எஸ்.சதீஸ்சர்மா