முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (01.04.2014) தள்ளுபடி செய்தது.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று (01.04.2014) விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்த உத்தரவு சரியே என்றும் கூறி, மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது