இலங்கை, யாழ்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 6 அடி உயர எம்.ஜி.ஆர் உருவச்சிலை 02.04.2014 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் சுமார் மூன்று இலட்ச ரூபா செலவில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
யாழ்பாணம் கல்வியங்காடு நவீன சந்தை கட்டடப் பகுதிக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இச்சிலையை இந்திய சிற்பக்கலைஞர் புருசோத்தமன் வடித்துக் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே, யாழ்பாணம் குடாநாட்டின் வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை இலங்கை படையினரால் உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில் புதிய சிலை 02.04.2014 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிலையை யாழ்பாண மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா திறந்து வைத்தார்.