நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து நாமக்கல் கருப்பட்டிபாளையம் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திடலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 03.04.2014 வியாழக்கிழமை நண்பகல் 2.30 மணிக்கு பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தின் உரிமைகள் பறிபோகக் காரணமே திமுக சுட்டிக் காட்டிய காங்கிரஸ் அரசு தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். கடந்த தேர்தலில் நாங்கள் அளித்த 170 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அதிமுகவினர், தமிழகத்தில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை குறிப்பிட்டு வாக்கு கேட்கிறோம்.
ஆனால், இதுவரை என்னென்ன நன்மை செய்தோம் என்று கூறி திமுக வாக்கு கேட்கவில்லை. கருணாநிதி கைகாட்டும் நபர்தான் பிரதமராவார் என்று கூறித்தான் வாக்கு கேட்கிறார்கள். தமிழக உரிமைகள் பறிபோகக் காரணமே தி.மு.க கை காட்டிய காங்கிரஸ் அரசு தான் என்று ஜெ.ஜெயலலிதா பேசினார்.