புதுச்சேரியில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, பா.ம.க தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றுள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுமே விஜயகாந்த் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கட்சி தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த குழப்பம் காரணமாக நடிகர் விஜயகாந்த் பிரசாரத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், யாரை ஆதரித்தாலும் கூட்டணிக்குள் அனாவசிய பிரச்னை ஏற்படும் என்பதால், புதுச்சேரியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பெயர் மற்றும் படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என தே.மு.தி.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
-கே.பி.சுகுமார்