நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13.04.2014 அன்று கரூர் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
காவிரிப் பிரச்னையில், காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டை வஞ்சித்து, தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நதிநீரில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், பாரதிய ஜனதா, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர்ப் பிரச்னை பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ, டாக்டர் ராமதாஸ் மற்றும் இதர கட்சியினர், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரைப் பெற, பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து என்ன உத்தரவாதம் பெற்றுள்ளனர்? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கானப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
-இரா.அருண்கேசவன்