இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் ஊர்வலத்தில் பிரம்மாண்டமான தேர் குடைசாய்ந்தது!

sl.yalpanam sl.yalpanam.jpg1

இலங்கை, யாழ்ப்பாணம் கலட்டி பிள்ளையார் கோயில் வருடாந்திர தேர்த் திருவிழா 14.04.2014 அன்று காலை நடைபெற்றது. அப்போது ஆலயப் பின் வீதியில் பிரம்மாண்டமாக வலம் வந்து கொண்டிருந்த தேர் திடீரென குடைசாய்ந்தது. இதனால் பக்தர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் பக்தர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், தேரில் இருந்த அர்ச்சகர் ஒருவர் காயமடைந்தார். தேர் அடித்தட்டு சேதம் அடைந்ததுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.