நடிகர் விஜயகாந்த் நடத்தும் அரசியல் நாடகம்!

VIJAYAகடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்;டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வின் ஆதரவுடன் தே.மு.தி.க வெற்றி பெற்றது. தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க எதிர்கட்சி அந்தஸ்தை இழந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக தே.மு.தி.க.வின் தலைவர் நடிகர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மிகப்பெரிய பதவியான எதிர்கட்சித் தலைவர் பதவியை வகித்து வந்த நடிகர் விஜயகாந்த், தமிழக சட்டமன்றக் கூட்டத்திற்கு சரிவர வரவில்லை. தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசவும் இல்லை.

கடந்த 3 ஆண்டுகளாக சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமல் நம்பி வாக்களித்த தமிழக மக்களை ஏமாற்றி வந்த நடிகர் விஜயகாந்த். தான் இருப்பதாக தமிழக மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது அறிக்கை அரசியலை நடத்தி வந்தார், இதற்காகவா தமிழக மக்கள் இவருக்கு வாக்களித்தார்கள்?

2011-ம் ஆண்டு எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றதிலிருந்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வரை தமிழகத்தைப் பற்றியும், தமிழக மக்களை பற்றியும் எள்ளளவும், எள்முனையளவும் கவலைப்படாத நடிகர் விஜயகாந்த் கற்பனை உலகத்தில் மிதந்து   வந்தார்.

இவரது நடவடிக்கையை பிடிக்காத அவரது கட்சியை சேர்ந்த ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல், வேறு வழியின்றி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களது தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு பரிகாரம் தேடிக்கொண்டனர்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக’ தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியை சரிவர பயன்படுத்தி கொள்ளாத நடிகர் விஜயகாந்த். தன்னை ஒரு தேசிய கட்சியின் தலைவராக காட்டிக் கொள்வதற்காக, டெல்லியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்தி தான் ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். அய்யோ பாவம்! அவரது கனவு அங்கு தரைமட்டமானது.
DMDK PARTYVIJAYAGANTH -LETTER-TO-PM-Page-1- VIJAYAGANTH -LETTER-TO-PM-Page-2- VIJAYAGANTH -LETTER-TO-PM-Page 3- VIJAYAGANTH -LETTER-TO-PM-Page 4 VIJAYAGANTH -LETTER-TO-PM-Page 5- VIJAYAGANTH -LETTER-TO-PM-Page 6-அதன் பிறகு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.  அதன் தொடக்கமாக கடந்த 14.02.2014 அன்று பாரத பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தமிழக அரசைப் பற்றி குறை கூறி 6 பக்கங்கள் அடங்கிய ஒரு புகார் மனுவை அளித்தார்.

அப்போது நீங்கள் தமிழக முதலமைச்சராக ஆனால்தான், தமிழகத்தின் பிரச்சினைகள் தீரும் என்று தன்னிடம் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக பத்திரிகையாளர்களிடம் நடிகர் விஜயகாந்த் தம்பட்டம் அடித்து கொண்டார்.

தனது கட்சி எம்.எல்.ஏ.-க்களுடனும், தனது மனைவி மற்றும் மைத்துனருடனும் பிரதமர் மன்மோகன்சிங்குடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியையும், அவரது மகன் ராகுல் காந்தியையும் நேரில் சந்திப்பதற்கு தவமாய் தவமிருந்து பார்த்தார்.  ஒரு புழு, பூச்சிகளுக்கு கொடுக்கும் மரியாதையை கூட அவர்கள் இவருக்கு கொடுக்கவில்லை. இதனால் இவர் விரக்தியோடு சென்னை திரும்பினார்.

அதன்பிறகு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும், பல்வேறு கட்சிகளுடன் பேரம் பேசினார். அவர் நடத்திய பேரம் சரிவரப் படியாததால், உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற ஊழல் ஒழிப்பு மாநாட்டில் தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அம்மாநாட்டில் தனித்து போட்டியிடலாமா? கூட்டணி அமைக்கலாமா? என்று அவரது தொண்டர்களிடம் கருத்து கேட்டார். தனித்தே போட்டியிடலாம் என்று தொண்டர்கள் அனைவரும் உரத்த குரலில் கூறினார்கள். தொண்டர்கள் முடிவுதான் என்னோட முடிவு என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்பிறகு தி.மு.க தரப்பினரிடம் பேரம் பேசினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்று தன் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு வருவதாக சென்றார். அவர் நடத்திய பேரம் எங்கும் சரிவரப் படியாததால் அங்கிருந்து விரக்தியோடு சென்னை திரும்பினார்.

வேறு வழியின்றி மனைவி மற்றும் மைத்துனரின் வற்புறுத்தலின் பேரில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்தார்.
VIJAYAKANTH VIJAYAKANTH.jpg1

இந்நிலையில் இன்று (16.04.2014) குஜராத் முதல்வர் நரேந்திர மோதிக்கு இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் ஏதோ நரேந்திர மோதி பிரதமராகி விட்டதைப் போலவும், அந்த ஆட்சியில் தாம் அங்கம் வகிப்பதைப் போலவும், அவரது கடிதம் அமைந்துள்ளது. அதில் தமிழக அரசைப் பற்றி விமர்சித்து குறை கூறியுள்ளார். இதன் மூலம் நடிகர் விஜயகாந்த் கற்பனை உலகத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது,  ‘பிறக்காத பிள்ளைக்கு பெயர் சூட்டுவதைப் போல’ இவரது நடவடிக்கை அமைந்துள்ளது.

ஒருவர் ஒரு பதவிக்கு வருவதற்கு முன்பு அதைப்பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது தவறில்லை. ஆனால், பதவிக்கு வந்தவுடன் அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், சினிமாவில் தான் கதாநாயகனாக நடித்ததைப் போலவே நிஜவாழ்விலும் நடிகர் விஜயகாந்த் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் பேசாமல், நடிகர் விஜயகாந்த் இப்படி தரம் தாழ்ந்து நடந்து கொள்வது, அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல.

பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்க்கு எழுதிய புகார் மனுவில் கையெழுத்து ஆங்கிலத்திலும், F[uhj; Kjy;tர் நரேந்திரமோதிக்கு எழுதிய புகார் மனுவில் கையெழுத்து தமிழிலும் ebfh; tp[afhe;j; போட்டிருக்கிறார். தன் கையெழுத்தை மாற்றி போடுவதை போல, தன் முடிவுகளையும் அடிக்கடி மாற்றிக் கொள்கிறார் போலும்.

 

-டாக்டர்.துரைபெஞ்சமின்.