2ஜி அலைக்கற்றை ஊழலில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் மனைவி தயாளு அம்மாள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

-dhayaluraja-kanimoli2ஜி அலைக்கற்றை ஊழலில் கருப்புப்பண விவகாரம் தொடர்பான வழக்கில் தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் தயாளு அம்மாள், உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தில்லி நீதிமன்றத்தில் இன்று (25.04.2014) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையின்போது, தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி பெறப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக கருப்புப் பண மோசடி பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி மற்றும் தயாளு அம்மாளுக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில், ஆ.ராசா, கனிமொழி , தயாளு அம்மாள், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த சாகித் பாவ்லா உட்பட 19 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

-எஸ்.சதீஸ்சர்மா