அ.இஅ.தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் : புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கை!

tn.cm jayaதமிழகத்தில் நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில், உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர் அமைப்புகளும், புலம்பெயர் தமிழர்களும், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஆன்லைன் மூலம் பிரச்சாரம் செய்தார்கள்.

இது குறித்து இந்தியாவில் உள்ள எந்த ஊடகங்களும் வாய்திறக்கவும் இல்லை. ஒரு வரிக்கூட செய்தி வெளியிடவும் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் நரேந்திர மோதியின் மாய வலையில் மூழ்கி போயிருந்தன. ஆனால், நமது ‘உள்ளாட்சித் தகவல்’ இணைய ஊடகம் மட்டும்தான் இதுக்குறித்து உடனுக்குடன் ஆதாரங்களோடு செய்திகளை வெளியிட்டு வந்தது.

இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அ.இஅ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக தற்போது தெரியவருகிறது.

ஜெ.ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த தனது நிலைப்பாட்டை மாற்றி இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்.

இதனால், இலங்கை தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் அ.இஅ.தி.மு.க.வின் வெற்றிக்காக இணையத்தள பிரசாரங்களை மேற்கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்று அ.இஅ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா இந்தியாவின் அடுத்த பிரதமராக தெரிவானால், தனித் தமிழ் ஈழத்திற்கான ஒரு வலுவான நபராக இருப்பார் எனவும், இந்த காலக்கட்டத்தில் ஜெயலிதாவை தவிர, ஒரு நம்பகமான தலைவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லையென்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

இதனால் புலம்பெயர் குழுக்கள் தேர்தலில் அ.இஅ.தி.மு.க வெற்றி பெறும் என்று பந்தயம் கட்டி வருகின்றனர்.

அதேவேளை ம.தி.மு.க பொதுச்செயலாளரும் புலிகளின் முக்கிய ஆதரவாளரும் புலம்பெயர் தமிழர்களின் அன்புக்கு பாத்திரமான வைகோவால் கூட அவர்கள் மத்தியில் இவ்வாறான ஆதரவை பெற முடியவில்லை.

மத்தியில் ஜெ.ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தால், ஈழ தமிழர்களுக்கான தனது ஆதரவு நிலையில் வேகம் காட்டுவார் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

இதனால் தமிழர்கள் பெருமளவில் அ.இஅ.தி.மு.க.விற்கு ஆதரவு வழங்கி ஜெ.ஜெயலலிதாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என அமெரிக்காவை தளமாக கொண்ட ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்தது. அதை ஆதாரங்களோடு வெளியிட்ட ஒரே இந்திய ஊடகம் நமது ‘உள்ளாட்சித் தகவல்’ மட்டும்தான்.

ஈழப்பிரச்சினை, கொழும்பு மீதான பொருளாதார தடை, இனப்படுகொலைக்கு உறுதியான பொறுப்புக் கூறல் போன்ற தனது நிலைப்பாடுகளை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடர்வார் என அவர்கள் கருதுகின்றனர்.

இதனால் இது முக்கியமான தேர்தல், தமிழ் சகோதரர்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை தவறவிடாது உணர்வு பூர்வமாக முடிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே அவர்கள் எழுத்து மூலம் கேட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

மத்தியில் ஜெ.ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்துவிட கூடாது என்றும், ஜெ.ஜெயலலிதா தயவும், ஆதரவும் இல்லாமலேயே மத்தியில் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்றும், அவரது அரசியல் எதிரிகளும், இலங்கை அதிபர் ராஜபட்ஷேவின் கைகூலி சுப்ரமணியசுவாமி போன்றவர்களும், விகடன் மற்றும் தினமலர் போன்ற ஊடகங்களும், கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு அரசியல் கோமாளி துக்ளக் ‘சோ’ ராமசாமி போன்றவர்கள் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் ஆட்டி வருகின்றனர். இவர்களுடைய கனவில் மண் விழும் வகையில் தான் இத்தேர்தல் முடிவுகள் அமையும்.

2004-ல் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த அதே வெற்றி, இத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய சக்தியாக ஜெ.ஜெயலலிதா விளங்குவார்.

  -டாக்டர்.துரைபெஞ்சமின்.