உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பதவியேற்றார்

தலைமை நீதிபதி ராஜேந்திர மால் லோதாவிற்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்த போது எடுத்த படம்

தலைமை நீதிபதி ராஜேந்திர மால் லோதாவிற்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்த போது எடுத்த படம்.

உச்சநீதிமன்றத்தின் 41-வது தலைமை நீதிபதியாக ராஜேந்திர மால் லோதா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (27.04.2014 ) காலை நடந்த விழாவில் தலைமை நீதிபதி ராஜேந்திர மால் லோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எம்.லோதா, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு நல்ல நீதிபதிகளை நியமிப்பதே எனது முதல் முன்னரிமை. வால்ட்பிட்மேன் கூறியதைப்போல சிறந்த நீதிபதிகளை பொறுப்பில் அமர்த்தினால் மற்ற அனைத்துப் பணிகளும் சீராகிவிடும் என்பதுதான் என் கருத்து. நல்ல நீதிபதிகள் இருந்தால் 17, 18 ஆண்டுகளில் நீதித்துறை மேம்படும்.

மேலும், நீதிபதிகள் நியமனத்திற்கான நடைமுறையில் மாற்றம் தேவை இல்லை. நீதிபதிகளுக்கான பதவி காலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு நிர்ணயிப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றார்.

-சி.மகேந்திரன்.