ஜம்மு-காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் கடந்த 25.04.2014 அன்று நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் கொல்லப்பட்டார்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்த மேஜர் முகுந்த் உடலை விமானத்தில் கொண்டு வந்த விமானி சீனிவாசன், முகுந்தின் தாய்-தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், உங்கள் வீரமகனின் உடலை கொண்டு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. முகுந்தின் ஆன்மாவை இறைவன் சாந்தியடைய வைப்பதுடன் உங்களுக்கு மிகுந்த மன வலிமையும் தருவார் என்று நம்புகிறேன்.
மேலும், தயவு செய்து என்னையும் உங்கள் மகன்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும், உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் விமானி சீனிவாசன் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.