இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பாக 12,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஆயிரம் பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையில் வடக்கில் 119 பாலியல் வன்முறைச் சம்பவங்களும், 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையில் 256 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்முறைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரங்கமாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்களே இவ்வளவு என்றால், போலிஸ் தரப்பில் பதிவு செய்யப்படாத பாலியல் குற்றங்கள் எத்தனையோ? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.