மகாராஷ்ட்ரா மாநிலம், ரைகட் மாவட்டத்தில் உள்ள நகோதானே- ரோஹா நிலையங்களுக்கு இடையில் இன்று (04.05.2014) காலை 9.40 மணியளவில் திவா-சவந்த்வாதி பயணிகள் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது.
அந்த ரெயில் மும்பய்லிருந்து 136 கிலோமீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது.
இதில் ரெயிலின் 4 பயணிகள் பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள், 30 பேர் காயம் அடைந்தனர். இவ்விபத்தில் காயமடைந்த பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிடபட்டுள்ளது. இந்த பயணிகள் ரெயில் தடம்புரண்டதற்கான காரணம் நாசவேலையாக இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-எஸ்.சதீஸ்சர்மா