திருச்சி, பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தம் போக்குவரத்துக்கு இடையூறாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது.
இதனை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் கிழக்கே தற்போது பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
-கே.பி.சுகுமார்.