இலங்கை, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் இலங்கை, இந்தியா, மாலைதீவுக்கான இணைச் செயலாளர் திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் 09.05.2014 அன்று சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கருத்துக் கேட்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை அங்கிருந்த ஒருவர் பலவந்தமாக வெளியே தள்ளியுள்ளார்.
இச்சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை வெளியாக வில்லை. இந்த பயணம் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை எனபது குறிப்பிடதக்கது.