ஆர்.கே.ஜி.பவுண்டேஷன் சார்பில் சிதம்பரம், மாலைக்கட்டித்தெரு, ஆறுமுகநாவலர் நிலையத்தில் அன்னையர் தின விழா இன்று (11.05.2014) நடைபெற்றது. விழாவில் அன்னையர்களுக்கு, அவர்களது பிள்ளைகள் பாத பூஜை செய்து வணங்கினர்.
இறைவன் எப்பொழுதும் நம் கூடவே இருக்க முடியாது என்பதற்காகதான், தாயின் மூலமாக நம்மை படைத்துள்ளான். எனவே, தாயை இன்று மட்டுமல்ல, நம் உயிர் உள்ளவரை ஒவ்வொரு நாளும் மனதில் வைத்து பூஜிக்க வேண்டும். அது மட்டுமல்ல மாதா, பிதா, குரு இவர்கள்தான் தெய்வம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டும்.
-ஆர்.பிரியதர்ஷிணி.