இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்தவர்கள் அகதிகள் அல்ல! இலங்கை இராணுவத்துடன் தொடர்புடைய மோசடி பேர்வழிகள்!

தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா மற்றும் குழந்தைகள்

தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா மற்றும் குழந்தைகள்

அண்மையில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்தவர்கள் அகதிகள் அல்ல! இலங்கை இராணுவத்துடன் தொடர்புடைய மோசடி பேர்வழிகள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 05.05.2014 அன்று இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கை அகதிகள் கடல் மார்க்கமாக தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

அவர்களில் தயாபர ராஜா (தேசிய அடையாள அட்டை எண்: 810020431V) 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர். யாழ்ப்பாணம், காரைநகர், வாரிவளவைச் சேர்ந்தவர். இவருடைய தகப்பனின் பெயர் செல்லத்துரை கதிரவேலு. இவர் பெரதெனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு 2005 ஆம் ஆண்டு வெளியேறியவர்.

இதன் பின்னர் ‘வன்னி டெக்’ என்ற பெயரில் முல்லைத்தீவில் தகவல் தொழில்நுட்ப நிலையம் ஒன்றை நடத்தியவர். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் வரி விலக்கு அளிக்கப்பட்ட, சர்வதேச தமிழ் தொழில் நுட்பவியலாளர் கழகம் (ITTPO) என்ற தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதம் ஐம்பதினாயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக தகவல் தொழில்நுட்ப பணியாற்றியவர்.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கை குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தயாபர ராஜா, செப்டம்பர் 13 ஆம் நாள், அவிசாவளையில் சட்டவிரோதமான முறையில் இலங்கை குற்றப் புலனாய்வுத்துறையினரால் சுடப்பட்டதாகவும், கடுமையான காயங்களுடன் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தயாபர ராஜா அனுமதிக்கப்பட்டதாகவும், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இவர் மரணமடைந்ததாகவும், இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை செய்தியை கசிய விட்டது.

இதை உண்மை என்று நம்பி, அனைத்து ஊடகங்களும், மிகப் பெரிய வீரனை தமிழ் ஈழம் இழந்து விட்டதாக பரப்பரப்பாக செய்தி வெளியிட்டது.

தகவல் தொழில்நுட்ப துறையில் ஆற்றல் மிக்க ஒரு கணினிப் பொறியியலாளராக இருந்த தயாபர ராஜாவை, இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை கொல்வதற்கு பதிலாக, அவரது அனுபவத்தையும், ஆற்றலையும் தங்களின் ஆக்கப் பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்திகொள்ள நினைத்தது. அவற்றின் விளைவாக இலங்கை அரசாங்கத்தின் உளவாளியாக தயாபர ராஜா மாற்றப்பட்டார்.

தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா (பழைய படம்)

தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா (பழைய படம்)

தயாபர ராஜாவின் மனைவி பெயர் உதயகலா. (தேசிய அடையாள அட்டை எண்: 825884726V) இவர் சாவகச்சேரி, நுணாவிலைச் சேர்ந்தவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. மூத்த மகன் டியோரன் (9வயது), மகள்கள் டிலினி (6வயது), டில்கியா (2வயது). இவர்கள் ஆரம்பத்தில் முல்லைத்தீவில் வசித்த போதிலும், தற்போது, எண் 60, ஆரம்பப் பாடசாலை வீதி, வவுனியாவில் வசித்து வந்த நிலையில், அகதி என்ற போர்வையில் தற்போது தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினருடனும், படைப் புலனாய்வாளர்களுடனும், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள தயாபர ராஜாவும், உதயகலாவும் மிகப் பெரிய மோசடிக்காரர்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள். பணத்திற்காக எந்த பாதகத்தையும் துணிந்து செய்ய கூடியவர்கள்.

வன்னியில் கணவனை இழந்த விதவைகள், யுத்தத்தால் ஊனமுற்றவர்கள், பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள், முன்னாள் போராளிகளின் மனைவிகள்.. இப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நபர்கள் தற்போது கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர்.

தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா (பழைய படம்)

தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா (பழைய படம்)

இலங்கை இராணுவத் தலைமையுடன் தமக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி, தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் தகவல்களைப் பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும், தடுப்பிலுள்ளவர்களின் மனைவிமார் அல்லது பெற்றோருடன் தொடர்பு கொண்டு உங்கள் உறவுகள் இந்த தடுப்பு முகாமில் இருக்கின்றனர் என்று பெயர், விபரங்களைக் கூறி, அவர்களை படையினர் சுடுவதற்கு தயாராகி வருகின்றனர். நாங்கள் மீட்டுத் தருகிறோம். இவ்வளவு பணம் தாருங்கள் என்று கூறி பெரும் தொகையை மோசடியாகப் பெற்றுள்ளனர்.

இதற்கு மேலாக, வன்னிப் போரில் ஊனமுற்றவர்களுக்கு புலம்பெயர் நாட்டிலுள்ள சில அமைப்புகள் உதவி செய்துவருவதை அறிந்த இவர்கள், ஊனமுற்றவர்களிடம் சென்று தங்களுக்கும், வெளிநாட்டு பராமரிப்பு அமைப்புகளுக்கும் தொடர்புகள் உள்ளன என்றும், இதனால் வெளிநாட்டுக்கு சென்று நல்ல நிலையில் வாழலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.

இதனை நம்பிய அவர்களும் தமக்கு உதவி செய்கின்ற புலம்பெயர் நாட்டிலுள்ளோரின் விபரங்களை தயாபர ராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோரிடம் வழங்கியிருக்கின்றனர்.

இதனைப் பயன்படுத்தி புலம்பெயர் நாட்டிலுள்ள அந்தச் சேவையாளர்களைத் தொடர்பு கொண்ட தயாபர ராஜா தம்பதியினர், தாங்கள் சிறிலங்காவிலுள்ள மனிதநேய அமைப்பொன்றிலிருந்து பேசுவதாகவும், உங்களால் பராமரிக்கப்படுகின்றவர்களை நாங்கள் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கின்றோம். அதற்கு ஆகவேண்டிய செலவாக நீங்கள் இத்தனை இலட்சம் ரூபாவை வழங்க முடியுமா என்றும் கேட்டிருக்கின்றனர்.

அந்த நல்ல மனம் படைத்த புலம்பெயர் தமிழர்கள், இந்த மோசடிப் பேர்வழிகளை நம்பி இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை அனுப்பியிருக்கின்றனர். இந்தப் பணம் முழுவதையும் இவர்கள் சுருட்டிய பின் அந்த ஊனமுற்றவர்களை கைகழுவி உள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாணம் மற்றும் வன்னியிலுள்ள பல ஊனமுற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு, தமது வாகனங்களில் கொழும்புக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து வெளிநாட்டு தரகர்கள் போன்று சிலரைச் சந்திக்க செய்த பின்னர், இவர்களிடம் இருந்து பணம் கறக்கப்பட்டுள்ளது.

தடுப்பிலுள்ளவர்களை விடுவிப்பதற்காக குறித்த பணத்தை தராவிட்டால் உறவினர்களை கடுமையாகத் தாக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. ஒரு தடவை தடுப்பிலுள்ள தனது மகனை விடுவிப்பதற்காக பெருந்தொகைப் பணத்தைப் பேரம் பேசிய சாவகச்சேரியைச் சேர்ந்த வயதான பெண்ணொருவர், மகனை விடுவிக்காத நிலையில் குறித்த பணத்தைக் கொடுக்காததால், தயாபர ராஜின் மனைவி உதயகலா வயதான பெண்ணை கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அதனால் அந்த வயதான பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருக்கின்றார்.

ஜீன்ஸ் அணிந்து எடுப்பாகத் தோற்றமளிக்கும் உதயகலா, தடுப்பிலுள்ளவர்களின் உறவினர்களது வீடுகளுக்குச் சென்று, தன்னை இராணுவப் புலனாய்வாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தடுப்பிலுள்ள உறவினர் தொடர்பில் விசாரிப்பதற்கு நாலாம் மாடிக்கு வருமாறு அச்சுறுத்திவிட்டு கொழும்பிற்கு வந்து அழைப்பு விடுக்குமாறு தனது தொலைபேசி எண்ணை வழங்கிச் செல்வாராம்.

சம்பந்தப்பட்டவர்கள் பயந்தவாறு கொழும்பிற்குச் சென்று அந்த எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டால், அவர்களை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்துகொண்டு, உறவினர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி இவ்வளவு பணம் தந்தால் தான் அவரை விடுவிக்க முடியும் என்று கூறி இலட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் விடுதலை செய்திருக்கின்றார்கள்.

சிறிலங்காவிலுள்ள பல்வேறு வங்கிகளிலும் கணக்குகளைப் பேணுகின்ற தயாபர ராஜா உதயகலா ஆகிய இருவரும், அந்தக் கணக்குகளின் மூலமே பணத்தைப் பெற்றுள்ளனர். தயாபரராஜின் கொமர்சல் வங்கிக் கணக்கு எண்: 8100065900 வெள்ளவத்தை கிளை, இவருடைய செலான் வங்கி கணக்கு எண்: 0137001-013725 இவருடைய மக்கள் வங்கிக் கணக்கு எண்: 0142001-7000-1411 யூனியன் பிளேஸ் கிளை. இந்தக் கணக்குகளில் சில கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள ஏறக்குறைய அறுபதுக்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் தனித்தனியே பல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து, கடந்த மாதம் வரை, இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் உதவியுடன் இவர்களின் மோசடிகள் தொடர்ந்து நடைப்பெற்றுள்ளன.

தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக நீதிமன்றங்கள் பிடியாணை உத்தரவுகள் பிறபித்து உள்ளமையால், இவர்கள் அங்கிருந்து தப்பி, இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் உதவியுடன் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள்.

இவர்களை உரிய முறையில் விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரும். எனவே, தமிழக அரசும், தமிழக காவல்துறையினரும் இவர்கள் விசியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

-டாக்டர்துரைபெஞ்சமின்.