இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத்தேர்வு யாழ்ப்பாணம், பொது நூலகத்திற்கு அருகில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் மைதானத்தில் 19.05.2014 அன்று காலை நடைப்பெற்றது.
இந்த நேர்முகத் தேர்விற்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 இளம்பெண்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் 32 பேரும் 19.05.2014 முதல் இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களுக்கான பயிற்சிகள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள, பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் மல்லவராச்சி தெரிவித்தார்.