ஊடக வியபாரிகளின் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிய தமிழக வாக்காளர்கள்!

votersநடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பல்வேறு யூகங்களின் அடிப்படையில், பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன.

பொதுவாக மக்களின் மனநிலைமையை முன்கூட்டியே அறியும் விதமாக பத்திரிகைகள் சார்பில் ‘கருத்துக் கணிப்புகள்’ எடுத்த காலம் மலையேறிப் போய், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும், மனதில் வைத்துக் கொண்டு, தொழில் போட்டியின் காரணமாக ‘இதழியல் தர்மம்’ என்ற ஒன்று இருப்பதையே மனதில் கொள்ளாமல், வஞ்சம் தீர்த்து கொள்வதற்கு இத்தேர்தல் தான் சரியான வாய்ப்பு என்று கருதி, ஒரு சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டன.

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும், தங்கள் பாணியையே மாற்றிக் கொண்டவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
பத்துக்கு, பத்து ஏசி அறையில் உட்காந்து கொண்டே, தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளைப் பற்றி கருத்துக் கணிப்புகள் வெளியிட்டவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்கும் போது நமக்கு வியப்பளிக்கவில்லை. மாறாக வேதனை அளிக்கின்றது.

தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவில், முடிவாக இருப்பவர்கள் அனைத்து தொகுதிகளுக்கும் போனால்தான் என்ன? போகாவிட்டால் தான் என்ன? ‘யானையை தடவிப்பார்த்து குருடன் குறிச்சொன்ன கதையாகத்தான்’ இவர்களின் கணிப்புகள் இருக்கிறது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை ! இத்தேர்தல் முடிவுகளே அதை தெரிவித்து விட்டன.

நாம் வெளியிடும் கருத்துக் கணிப்புகள், அடுத்த சில தினங்களில் வெளிவரப்போகும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளோடு, எந்த விதத்திலும் கொஞ்சம் கூட சம்மந்தமில்லாமல் இருக்குமேயானால், நம்மை பற்றியும், நம் பத்திரிகையைப் பற்றியும் மக்கள் என்ன நினைப்பார்கள்?

ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதற்காக, மக்கள் நம் முகத்தில் காரி துப்ப மாட்டார்களா? என்ற கூச்சமோ, குற்ற உணர்வோ, பயமோ இல்லாமல் இவர்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகிறார்கள் என்றால், இவர்களுக்கு மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? உண்மையிலுமே இது நடுநிலையாளர்கள்களுக்கு வேதனையளிக்க கூடிய விசியமாகும்.

தமிழ் மக்களின் நாடித்துடிப்பாக விளங்குவதாக, தங்களை பிரகடனம் செய்து கொண்டு, உலகம் முழுவதும் உள்ள, தமிழ் படிக்கும் வாசகர்களை ஏமாற்றி வரும் “ஜீனியர் விகடன்” இதழின் லட்சணத்தை முதலில் பார்ப்போம்!

jv before electionஇந்திய தேர்தல் ஆணையத்தின் நடைத்தை விதி முறைகளை மீறி, வாக்கு பதிவு நடைபெறுவதற்கு முன்தினம் அதாவது 23.04.2014 அன்று, 27.04.2014 தேதியிட்டு வெளிவந்த “ஜீனியர் விகடன்” இதழில், தேர்தல் கணிப்பு ஸ்பெஷல்! 40 தொகுதிகளின் ‘நச்’ நிலவரம்! என்ற தலைப்பில் வந்த தேர்தல் முடிவுகள் :

அ.இ.அ.தி.மு.க : 15
தி.மு.க கூட்டணி : 14
பா.ஜ.க. கூட்டணி :11

அ.இ.அ.தி.மு.க வெற்றி பெறும் தொகுதிகள்:

1. திருவள்ளூர்
2. வட சென்னை.
3. தென் சென்னை
4. காஞ்சிபுரம்.
5. கிருஷ்ணகிரி
6. விழுப்புரம்
7. நாமக்கல்
8. திருப்பூர்
9. நீலகிரி
10. திருச்சி
11. கடலூர்
12. மயிலாடுதுறை
13. சிவகங்கை
14. மதுரை
15. தேனி.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள் :

1. மத்திய சென்னை
2. ஸ்ரீபெரும்புதூர்.
3.திருவண்ணாமலை
4. கள்ளக்குறிச்சி
5. தஞ்சை
6. சேலம்
7. திண்டுக்கல்
8. கரூர்
9. பெரம்பலூர்
10. நாகப்பட்டினம்
11. ராமநாதபுரம்
12. திருநெல்வேலி
13. சிதம்பரம்- விடுதலை சிறுத்தைகள்
14. தென்காசி- புதிய தமிழகம்

பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்:

1. வேலூர்- பா.ஜ.க.
2. கோவை- பா.ஜ.க.
3. பொள்ளாச்சி- பா.ஜ.க.
4. கன்னியாகுமரி- பா.ஜ.க.
5. அரக்கோணம்- பா.ம.க.
6. தர்மபுரி- பா.ம.க.
7. ஆரணி- பா.ம.க.
8. ஈரோடு – ம.தி.மு.க
9. விருதுநகர்- ம.தி.மு.க
10. தூத்துக்குடி- ம.தி.மு.க
11. புதுவை- என்.ஆர்.காங்கிரஸ்

தி.மு.க. கட்சியின் அதிகாரப்பூர்வ இதழாகவும், கோபாலபுரத்தின் ஊதுகுழலாகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் ‘நக்கீரன்’ இதழ் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட்டது. வாக்கு பதிவு நடைபெறுவதற்கு முன்பு, ‘நக்கீரன்’ வாரமிருமுறை இதழில் வெளிவந்த தேர்தல் முடிவுகள் :

nakkeeranதி.மு.க – 22,

அ.தி.மு.க -14

பா.ஜ.க -1

பா.ம.க -1

பாண்டிச்சேரியில் காங்கிரஸ்

தென் சென்னை இழுபறி

தே.மு.தி.க, ம.தி.மு.க.வுக்கு ‘முட்டை’

இதில் 22 இடங்களை தி.மு.க வெல்லும் என்றும், அ.தி.மு.க.வுக்கு 14 இடம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள். பா.ஜ.க, பா.மக.வுக்கு தலா ஒரு இடம் கிடைக்கும் என்றும், பாண்டிச்சேரியில் காங்கிரஸ் வெல்லும் என்றும், தென் சென்னையில் இழுபறி நிலவுகிறது என்றும், தே.மு.தி.க, ம.தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரிவித்து இருந்தார்கள்.

நிகழ்க் காலத்தின் குரலாக திகழும், ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ வாரமிருமுறை இதழும், ‘குமுதம்’ வார இதழும், வாக்கு பதிவு நடைபெறுவதற்கு முன்பு, தனது கருத்துக் கணிப்பு சர்வேக்களை வெளியிட்டது.

kumudam Rep 20-04-2014_வழக்கமாக ‘மீனுக்கு வாலையும், பாம்புக்கு தலையையும் ஆட்டி வரும்’ ‘குமுதம்’ நிறுவனம், இம்முறை தமிழகத்தில் நரேந்திர மோதிக்கு ஆதரவாகத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்பதில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு வந்தது.

‘குமுதம்’ ஊடக நிறுவனங்களின் உரிமை மற்றும் சொத்துக்கள், யாருக்கு சொந்தம்? என்பதே பல ஆண்டுகளாக நாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர்கள், நாட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முயல்வதுதான் நகைச்சுவையான விசியம்.

kumudam reporter1யாருக்கு ஓட்டுப் போடுவார்கள்? என்று தான் வழக்கமாய் கருத்துக் கணிப்புகள் இருக்கும். ஆனால், யார் மீது தமிழ் நாட்டு மக்கள் படுகோபமாய் இருக்கிறார்கள், யாருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ வாரமிருமுறை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியது.

தமிழ்நாட்டின் 39 பாராளுமன்ற தொகுதிகளில் ஆண்கள், பெண்கள், முதல்முறை வாக்காளர்கள், சுயதொழில் செய்பவர்கள், பள்ளிக் கல்வி படித்தவர்கள், பள்ளிக் கல்வி முடிக்காதவர்கள், பட்டதாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், என பலதரப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவு, எதிர்ப்பு என 66,100 நபர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இது நம்பத் தகுந்த விசியமாக இல்லை என்பதற்கு, ‘குமுதம்’ வார இதழில் வெளிவந்த தேர்தல் கருத்து கணிப்பே சான்று.

KUMUDAM  09-04-2014_kumudamஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தான் ஜெகத்ரட்சகன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.
ஆனால், 09.04.2014 தேதியிட்ட ‘குமுதம்’ இதழில், பக்கம் 19-ல், அரக்கோணம் தொகுதியில் தி.மு.க. சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுவதாக எழுதியுள்ளார்கள். ஆனால், அரக்கோணம் தொகுதியில் தி.மு.க. சார்பில் என்.ஆர்.இளங்கோ என்பவர் போட்டியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படி, எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே தெரியாமல் இவர்கள் கருத்துக் கணிப்பு வெளியிடுகிறார்கள் என்றால், இவர்களை என்ன செய்வது? இதற்கு பெயர்தான் நேரடிக் கள ஆய்வா? இந்த பிழைப்பு நடத்துவதற்கு நாண்டுக் கொண்டு சாகலாம்.

ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்தால், அரைப் பக்கம் செய்தியும், அரைப் பக்கம் விளம்பரம் கொடுத்தால், கால்ப் பக்கம் செய்தியும் வெளியிடும் ஒரு விசித்திரமானப் பத்திரிகை ஒன்று தமிழகத்தில் இருக்கிறது என்றால், அது ‘தினத்தந்தி’ தான் என்று பால் குடிக்கும் குழந்தைகள் கூட சொல்லும்.

thanthi_tvthanthitvserthanthitv sடீ கடை பத்திரிகை என்று, தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘தினத்தந்தி’யும், அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘தந்தி டிவி’யும் இணைந்து வெளியிட்ட வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தேர்தல் முடிவுகள் விபரம்:

அ.தி.மு.க.க்கு 24 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு – 05 தொகுதிகளும், பா.ஜ.க அணிக்கு – 04 தொகுதிகளும் உறுதியாக கிடைக்கும் என்றும், சமபலம் பொருந்திய தொகுதிகள் : 7 என்றும், அதில் அ.தி.மு.க.க்கு சாதகமாக 5 தொகுதிகளும், பா.ஜ.க அணிக்கு சாதகமாக மீதமுள்ள 2 தொகுதிகளும் அமையும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆக

அ.தி.மு.க.க்கு 24 + 5 = 29
தி.மு.க. அணிக்கு – 05
பா.ஜ.க அணிக்கு- 04 + 2= 06

உண்மையின் உரைக்கல்லாக விளங்கும் ‘தினமலர்’ ஊடகத்தைப் பற்றி, நாம் சொல்லவே தேவையில்லை. ‘தொகுதி நிலவரம்’ என்ற பெயரில், அவர்களின் ஆசையை பதிவு செய்தார்கள். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். கீழே உள்ள செய்தியை பார்த்தாலே அவர்களின் நடு நிலைமை நன்கு புரியும்.

dinamalarDINAMALAR

சரி, இனி ஆங்கில ஊடகங்களின் கருத்துக் கணிப்பை பார்ப்போம்:

ge 2014ஊடகங்களுக்கு வேண்டுமானால் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வியபாரமாக இருக்கலாம். ஆனால், பொய்யான தகவல்களை படிப்பதும், பார்ப்பதும், கேட்பதும் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மற்றும் சம்மந்தப்பட்ட கட்சிக்காரர்களுக்கும் எவ்வளவு பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதை கொஞ்சமாவது ஊடகத்துறையினர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இது போன்றப் போலியான தேர்தல் கருத்துக் கணிப்புகளை, உண்மை என்று நம்பி, எத்தனையோ அப்பாவி தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்ட மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் இங்கு உண்டு.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது உண்மையை மட்டும் வெளியிடுவதற்கு ஊடகத்துறையினர் முயற்சிக்க வேண்டும்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

E.Mail:drduraibenjamin@yahoo.in