இந்திய பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவதற்காக, இன்று (மே26) காலை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் டெல்லி வந்து சேர்ந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இலங்கைத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன் பிறகு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் அவர்களது தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அதிபர் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனவிரத்ன, யாழ்பாண மாநகரசபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, மத்திய மாகாண அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், உட்பட அமைச்சர் சிலரும் பங்கேற்கின்றனர்.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய வருகையினை முன்னிட்டு, தமிழகத்திலும், டெல்லியிலும் தமிழர்கள் கொந்தளித்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைப்பெற்று வருகின்றன.
-எஸ்.சதீஸ்சர்மா.