இலங்கை தமிழர்கள் பிரச்சனைப் பற்றியும், தமிழக மீனவர்கள் பிரச்சனைப் பற்றியும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயிடம் கறாராகப் பேசினார், கட்டன் ரைட்டாகப் பேசினார், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசினார்… இப்படி நமது இந்திய ஊடகங்கள், தமது கற்பனைக் குதிரைகளை பறக்க விட்டு கதை, திரைக்கதை, வசனங்களை… செய்தியாக வெளியிட்டுள்ளனர். உண்மையில் என்னதான் நடந்தது என்பதை நமது வாசகர்களின் கவனத்திற்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயுடன் இன்று (27.05.2014) முற்பகல் 10.47 மணியளவில் சுமார் 20 நிமிடம் நேரடியாகப் பேசினார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.
இச்சந்திப்புத் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜதா சிங் தெரிவிக்கையில்,
சார்க் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து, சார்க் நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தினார். இருதரப்பு உறவுகள், வர்த்தகம், உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் விவாதித்தார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழர் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்துமாறும், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்டத்திருத்த பிரிவை அமல்படுத்துமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
அதே சமயம் இலங்கை உடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் பிரதமர் மோதி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோதியை இலங்கை வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இலங்கை வர பிரதமர் மோதி சம்மதம் தெரிவித்ததாகவும் சுஜதா சிங் தெரிவித்தார்.
இச்சந்திப்பு குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளச் செய்தி அறிக்கை விபரம்:
மேலும், இன்று (27.05.2014) மதியம் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளச் செய்தி அறிக்கை விபரம்: