தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

jayalalithaDIPR-PRNo-269-Honble-CM-DO-letter-to-Honble-PM-on-Fishermen-Date-8-6 copyDIPR-PRNo-269-Honble-CM-DO-letter-to-Honble-PM-on-Fishermen-2Date-8-6 copyஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று (08.06.2014) கடிதம் எழுதியுள்ளார்.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி சிறைபிடிப்பது வாடிக்கையாகி விட்டது. நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றும், இன்றும் தமிழக மீனவர்களை இலங்கை கற்படை கைது செய்துள்ளது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மீண்டும், மீண்டும் இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கெனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 33 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பதற்கான மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மட்டும் 82 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுங்காலமாக தொடர்ந்து வரும் தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனையை தீர்க்க, நிரந்தர தீர்வுகான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

-சி.மகேந்திரன்.