மலிவு விலை உப்பு பாக்கெட் விற்பனையை, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச்செயலகத்தில் இன்று (11.06.2014) தொடங்கி வைத்தார்.
வெளிசந்தையில் விற்பனை செய்யப்படும் உப்பை விட தரம் உயர்த்தப்பட்ட நிலையில் ‘அம்மா உப்பு’ விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த 3 வகை உப்புகளையும் தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கிராமத்தில் உப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இங்கு 100 டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு முறையாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
அவற்றை மலிவு விலையில், அமுதம், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு கடைகள் மூலம் விற்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, மற்றும் குறைந்த அளவு சோடியம் உப்பு ஆகிய மூன்று வகை உப்புகள் மலிவு விலையில் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதைப் பார்க்கும் போது ‘உப்பிட்டவரை உள்ளவு நினை’ என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
-ஆர்.பிரியதர்ஷிணி.