இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவரும், ஜாதிக பலசேனா அமைப்பின் ஸ்தாபக தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர் 19.04.2014 அன்று இரவு கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளான நிலையில், பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகில் 19.04.2014 அன்று காலை 6.30 மணியளவில் குற்றுயிராய் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தேசிய அடையாள அட்டை அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அப்போது வட்டரக விஜித்த தேரரின் உடலில் இரத்தக் காயங்கள் இருந்தது. அவரை கடத்திய மர்ம நபர்கள், அவரது ஆண் உறுப்பை அறுத்து சித்தரவதை செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட அவர், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், வட்டரக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இலங்கையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் மக்கள் குலைநடுங்கி போய் உள்ளனர்.
பொது பல சேனா அமைப்பினர், தன்னைப் படுகொலை செய்வதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருப்பதாகவும், அதற்கானத் தருணத்தை அவர்கள் எதிர்பார்த்திருப்பதாகவும், இந்த சதியில் பொலிஸாருடைய சம்பந்தம் உள்ளதாகவும், எனவே, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை அதிபர் ராஜபட்ஷேவிடம் பலமுறை கூறியிருப்பதாகவும், கடந்த 27.05.2014 அன்று பத்திரிகையாளர்களிடம் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-யு.டி.எல். டீம்.