இலங்கையின் முன்னணி ஜவுளிக் கடையான “நோலிமிட்” என்ற வர்த்தக நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இன்று (21.06.2014) அதிகாலை இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஜவுளிக் கடை முற்றாக அழிந்து எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் பௌத்த மதத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள் இந்நிறுவனத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இந்நிறுவனத்தில் சுமார் ஐயாயிரம் ஊழியர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். இவர்களில் இரண்டாயிரம் பேர் சிங்களவர்கள், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முக்கிய நகரங்களில் 21 இடங்களில் இந்நிறுவனத்திற்கு கிளைகள் இருக்கிறது.
இந்நிலையில் பாணந்துறையில் உள்ள மிகப் பெரிய 3 மாடிகளைக் கொண்ட “நோலிமிட்” ஆடை விற்பனை நிலையத்திற்கு திட்டமிட்டு தீ வைத்துள்ளனர்.
நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் உள்ளே தங்கியிருந்த நிலையில், பொதுபல சேனா தீவிரவாதிகள் வெளியிலிருந்து “நோலிமிட்” காட்சியறைக்குத் தீ வைத்துள்ளார்கள்.
தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர். ஏனைய ஊழியர்களின் நிலை குறித்து தகவல்கள் தெரியவில்லை.
அவசரமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடவுள்ளோம் என்றும், இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் நாசகார செயல் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதனால் இலங்கை முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
-யு.டி.எல். டீம்.