சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், டவுன் பஞ்சாயத்து, செம்மநத்தம், வெள்ளக்கடை உள்ளிட்ட ஊராட்சிகளில் தமிழக அரசின் உத்தரவுப்படி மழைநீர் சேகரிப்பு பேரணி இன்று (24.06.2014) நடைபெற்றது.
பேரணி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, ஏற்காடு ஏரி மற்றும் அண்ணா பூங்கா வழியாக ஏற்காடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் உள்ளாட்சித்துறைச் சார்ந்த அலுவலர்களும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-ஏற்காட்டிலிருந்து நவீன்குமார்.