இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பேராசிரியர் சுதர்ஷன செனவிரட்ன நியமனம்!

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ- பேராசிரியர் சுதர்ஷன செனவிரட்னஇந்தியாவுக்கான இலங்கை தூதராக பதவி வகித்த பிரசாத் கரியவாசம், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதராக பேராசிரியர் சுதர்ஷன செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை சுதர்ஷன செனவிரட்னவிடம் 25.06.2014 அன்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வழங்கினார்.

புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுதர்ஷன செனவிரட்ன, பேராதனை பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் கல்வி பிரிவின் தலைவராகப் பதவி வகித்துள்ளார்.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், இந்தியாவில் சில பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.சதீஸ்சர்மா.