சேலம் மாவட்டம், ஏற்காடு நகரப்பகுதியில் ‘அலங்கார ஏரி’ உள்ளது. இந்த ஏரியில் இருந்துதான் ஏற்காடு நகரப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் அரசு கழிப்பிடங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைப்பெற்று வந்தது.
இத்தனை ஆண்டு காலம் இந்த ஏரியில் தண்ணீரின் அளவு குறையாமல்தான் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக ஏரி சரிவரப் பராமரிக்கப்படாமலும், தூற்வாரப்படாமலும் இருந்ததின் விளைவு, இப்போது புல் மண்டி, குப்பை கழிவுகள் தேங்கி மாசு அடைந்து உள்ளது.
இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போது ஏரி வற்றிய நிலையிலதான் உள்ளது. ஏரியை தூற்வாருவதற்கு இதுதான் ஏற்றத்தருணம்.
நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கும், நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும் ‘மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்’ அமைக்கும் திட்டத்தை, இந்தியாவிலேயே முதன் முதலாக கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா.
அதே போல் இயற்கை வளங்களையும், மலைப்பகுதியில் உள்ள ஏற்காடு போன்றச் சுற்றுலாத்தளங்களையும் பாதுகாப்பதற்காக அவரது தலைமையில், ‘தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரியமிக்க பகுதிகள் பாதுகாப்பு ஆணையம்’ அமைக்கப்படும் என்று நேற்று (27.06.2014) தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஏற்காடு அலங்கார ஏரியைப் போன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் பராமரிக்கப்படாமலும், தூற்வாரப்படாமலும், தனிநபர் ஆக்கரமிப்பிலும் இருக்கின்றன. எனவே, இவற்றையெல்லாம் முறையாகப் பராமரித்து, பாதுக்காத்தாலே, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைச்சார்ந்த அதிகாரிகள் ஆர்வமாகச் செயல்பட வேண்டும்.
-நவீன்குமார்.