சாக்கு மூட்டையில் ஆண் பிணம்: ஏற்காட்டில் பரப்பரப்பு!

ye2906P1 ye2906P2

ஏற்காட்டில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட         பிணம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு விசார ணை நடைப்பெற்று வருகிறது.

ஏற்காடு கொம்புத்தூக்கி கிராமத்தில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் துர்நாற்றம் வீசியதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது சாக்கு மூட்டையில் கட்டப்பட்;ட நிலையில் ஒரு ஆண் பிணம்  புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுக்குறித்து அப்பகுதி மக்கள் ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையில் அங்கு சென்ற காவல்துறையினர் பிணத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து விசாரிக்கும்போது, கொலை செய்யப்பட்டு கிடப்பது கே.நார்த்தன்சேடு கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகன் பழனியான்டிவயது 28 என்பது தெரிய வந்துள்ளது.

இவருக்கு ரேவதி என்ற மனைவியும், சர்மி, வைஷ்ணவி என்ற இருபெண்  குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இவர் வெளியு+ருக்கு சென்று மரவேலை செய்து வந்துள்ளார். மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் வெளியுரில் மரவேலைக்கு சென்றுவிடுவார். இதேபோல் கடந்த 12 ஆம் தேதி வேலைக்கு சென்றவர்  வீடு திரும்பவில்லை. இவரது மொபைல் போன் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

ரேவதி

ரேவதி

இதுகுறித்து இவரது மனைவியையும், அவரது உறவினர்களையும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல், ஏ.எஸ்.பி., சரோஜ்குமார்தாகூர், ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர்  விசாரித்து வருகின்றனர்.                                                             

 -நவீன்குமார்.