இராக் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களை ஏற்றி வந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம் இன்று (05.07.2014 சனிக்கிழமை) காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
இராக் நாட்டில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், ஐசிஸ் பிரிவினரால் பிடித்து வைக்கப்பட்ட 46 இந்திய செவிலியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அழைத்து வருவதற்காக ஒரு சிறப்பு விமானத்தை இந்திய அரசு ஏற்பாடு செய்தது.
நேற்று இரவு இராக் நாட்டில் உள்ள எர்பில் நகர விமான நிலையத்திற்கு சென்றடைந்த அந்த விமானத்தில், இந்திய அரசின் முக்கிய அதிகாரிகளும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள சென்றனர்.
எர்பில் நகர விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட சிறப்பு விமானத்தில், 46 இந்திய செவிலியர்கள் உள்ளிட்ட 116 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர்.
அந்த 46 இந்திய செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விமானம் கொச்சி விமான நிலையத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது.
-ஆர்.பிரியதர்ஷிணி.