இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது: முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா

முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா

முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது என முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையில் உருவாக்கப்பட்ட  78 -ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமற்றது என்று ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாகவும் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது.

அனைத்துக்கும் மேலாக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணை என்பது முக்கியமானது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் நபருக்கு எவ்வித தயக்கமும் இன்றி ஆதரவு வழங்கப்படும்.

எனினும் பொது வேட்பாளர் யார் என்பதை தான் அறியவில்லை எனவும், எந்த வகையிலும் தான் பொது வேட்பாளர் அல்ல எனவும், முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். 

-எஸ்.சதிஸ்சர்மா.