சேலம் மாவட்டம், ஏற்காடு, தமிழகத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். ஏற்காடு மலைக்கு செல்லும் சாலையில் டோல்கேட் உள்ளது.
ஏற்காடு மலைக்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் இந்த டோல்கேட் அதிக பணத்திற்கு ஏலம் செல்கிறது.
ஏற்காடு உள்ளுர்வாசிகளின் நான்கமர்சியல் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களுக்கும், வெளியூர்வாசிகளின் வாகனங்களுக்கு மட்டும் தான் சுங்க வரி வசூலிக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசின் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதிகமாக இலாபம் ஈட்ட வேண்டும் என்ற வியாபார நோக்கத்தில், உள்ளுர் வாசிகளின் வாகனங்களுக்கும் டோல்கேட் ஊழியர்கள் மிரட்டி சுங்க வரி வசூலித்து வருகின்றனர்.
அரசு ஆணையைப் பற்றி சொன்னாலும், அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று அராஜகம் செய்கிறார்கள்.
இதனால் உள்ளுர் வாசிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் அடிக்கடி வாய்த் தகறாறு ஏற்பட்டு வருகிறது.
எனவே, அரசு உத்தரவை மதிக்காத டோல்கேட் ஊழியர்கள் மீது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சனை ஏதாவது விரும்பதகாதச் சம்பவங்களுக்கு காரணமாகிவிடும்.
-நவீன் குமார்.