கொழும்பு ராயல் கல்லூரியில் 163 -வது பரிசளிப்பு விழா 10.07.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
வெளிநாடுகளின் அனுதாபத்தை எதிர்பார்த்து, அனுதாபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளதாகவும், தோல்வியடைந்த நாடுகளைப் போன்று எவரின் அனுதாபத்தையும் கோரி நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
-எஸ்.சதிஸ்சர்மா.