ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரப்படாமல் இருப்பது குறித்து 14.07.2014 அன்று நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அச்செய்தியை மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மேலானக் கவனத்திற்கும், துறைச்சார்ந்த அரசு செயலருக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் மின் அஞ்சல் மூலமாக நமது ‘உள்ளாட்சித்தகவல’ ஆசிரியர் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார அனுமதி கேட்டு பெங்களுருவில் உள்ள மத்திய அரசின் வனத்துறை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், தூத்துக்குடி நதி நீர் பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் சி.நயினார் குலசேகரனின் மனுவிற்கு பதில் அளித்துள்ளார்.
-பொ.கணேசன் @ இசக்கி.