மாணவ, மாணவியருக்கு இலவச தனிப்பயிற்சி வகுப்புகள் துவக்க விழா!

DSCF1744 DSCF1742தூத்துக்குடி கல்வி ஆர்வலர் குழு சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு முதல் ‘இலவச தனிப்பயிற்சி’ வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான துவக்க விழா இன்று (15.07.2014 செவ்வாய்கிழமை) மாலை 4 மணி அளவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

மேலும், தூத்துக்குடி நகரில் சென்ற கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இவ்விழாவில் தூத்துக்குடி நகரின் முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினர்.

இக்கல்வி ஆர்வலர் குழு இன்று முதல் சிறப்பாகச் செயல்பட்டு மாவட்டத்தில் அநேக மாணவ, மாணவியரை முதலிடம் பெறச்செய்ய தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கல்வி ஆர்வலர் குழு செயலாளர் திருச்சிற்றம்பலம் கூறினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாளான இன்று இவ்விழா நடைப்பெற்று இருப்பது பாராட்டிற்குரியது.

-பொ.கணேசன் @ இசக்கி.