சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு (19.07.2014 இன்றோடு) ஓராண்டு ஆகிறது. இதையடுத்து சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தமிழக பா.ஜனதா கட்சியின் பொது செயலாளராக இருந்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு இதே நாளில் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது.
இதையடுத்து சேலத்தில் பல்வேறு இடங்களில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆடிட்டர் ரமேஷ் கொலையுண்ட பகுதியில் அவரது உருவப்படம் மலர் அலங்காரம் செய்யப்பட்டு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
-நவீன் குமார்.