சேலம் மாவட்டம், ஏற்காடு, அக்கரையூர் கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இன்று (25.07.2014) மனு கொடுக்க வந்தனர். பி.டி.ஓ. சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விட்டதால், துணை பி.டி.ஓ வெங்கடாச்சலத்திடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் அக்கரையூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். இங்கு100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தற்போது தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
எனவே, நேரடி ஆய்வு செய்து இந்த கிணற்றிற்க்கு மின் மோட்டார் இணைப்பு ஏற்படுத்தி, தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட துணை பி.டி.ஓ . வெங்கடாச்சலம் இது குறித்து ஆவணம் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் திரும்பி சென்றனர்.
-நவீன் குமார்.