மினிபஸ்களின் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி வசூலித்து வரும் மினிபஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் 25.07.2014 அன்று காலை 10.00 மணியளவில் கடலையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு சி.பி.எம் ஒன்றிய செயலாளர் முத்துகாந்தாரி தலைமையில் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் சி.பி.எம் நகர செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஜி.ராமசுப்பு, டி.ஒய்.எஃப்.ஐ மாவட்டதலைவர் எல்.பி.ஜோதிபாசு, எஸ்.எஃப்.ஐ மாவட்டசெயலாளர் சுரேஷ் பாண்டி, டி.ஒய்.எஃப்.ஐ ஒன்றிய செயலாளர் கார்த்திக், சி.ஐ.டி.யு கன்வீனர் முருகன், சி.ஐ.டி.யு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அருணாசலம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அய்யலுசாமி, மாற்றுதிறனாளி சங்க ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், சி.பி.எம் கிளை செயலாளர் மாரிசாமி, மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-கோ.சரவணக்குமார்.